திமுக - பிடிஆர் விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முக்கிய முடிவு!

பி.டி.ஆரின்.ஆடியோவில் உள்ள முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விரைவில் ஆளுநரிடம் விசாரணை நடத்த மனு கொடுக்க உள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2023, 12:34 PM IST
  • ஓபிஎஸ் - டிடிவியால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது.
  • 1.5 கோடி தொண்டனின் சொத்து அதிமுக.
  • ஒரு செங்கலை கூட அவர்களால் கைப்பற்ற முடியாது.
திமுக - பிடிஆர் விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முக்கிய முடிவு! title=

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், இப்பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, மேலும் ஒரு அதிமுக சாதாரண தொண்டன் கூட அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறான். ஆனால் அவருக்கு அந்த எண்ணம் இல்லை. யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது,  எந்த உதவியும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர் வைத்தியலிங்கம். தற்போது ஓபிஎஸ் - வைத்திலிங்கம் அதிமுகவின் துரோகிகளாக மாறிவிட்டனர். ஓராயிரம் ஓபிஎஸ் வந்தாலும் - ஓராயிரம் வைத்தியலிங்கம் வந்தாலும் துரோகிகளுக்கு அதிமுகவில் எப்போதும் இடம் கிடையாது. அதிமுக ஆட்சியை கலைப்பதற்காக எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ். ஒரு அதிமுக தொண்டன் கூட அவரை மன்னிக்க மாட்டான். ஓபிஎஸ் எத்தனை முறை தர்ம யுத்தம் நடத்தினாலும், அவரின் நாடகம் பலிக்காது.

மேலும் திமுகவின் பினாமியாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பது, சபரீசனை சந்தித்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாக வந்துள்ளது. துரோகிகள் என்று மாறி மாறி கூறிக் கொண்டவர்கள் இப்போது ஒன்றாக இணைந்துவிட்டனர்.  ஓபிஎஸ் - டிடிவியால் எந்த காலத்திலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. 1.5 கோடி தொண்டனின் சொத்து அதிமுக. ஒரு செங்கலை கூட அவர்களால் கைப்பற்ற முடியாது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் -  வைத்திலிங்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திமுகவை வீழ்த்துவதுதான் எங்கள் லட்சியம். நாம்தான் அதிமுக, நமக்கு எதிரி திமுக. தற்போது தமிழகத்தில் எங்கும் எதிலும் லஞ்சம். இரண்டு வருடத்தில் 30 ஆயிரம் கோடி மக்கள் வரி பணம் சுருட்டப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவரும் இது குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பணம் கண்டிப்பாக மீட்கப்படும். மேலும் ஆளுநரை சந்தித்து இந்த முப்பதாயிரம் கோடி ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க மனு எடுக்க உள்ளோம் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

வைத்திலிங்கமும், ஓ.பி.எஸ்.,சும், ஜெயலலிதாவின் உயிர் போக காரணமாக இருந்தார்களோ, அவர்களைச் தேடிச் சென்று தி.மு.க.வுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதே போல, இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். இங்குள்ள அமைச்சர்கள், கட்சியினர் எல்லாம் தங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து கொடுங்கள் என கேட்பதுண்டு, ஆனால் வைத்திலிங்கம் எதுவும் கேட்கமாட்டார், யாருக்கும் எதுவும் செய்யமாட்டார். இப்படி பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது என பேசினார்.  திருச்சியில் ஒரு பொதுகூட்டத்தை கூட்டி வைத்திலிங்கமும், ஒ.பி.எஸ்.,சும் என்னை கடைசி வரை திட்டியது தான் மிச்சம். ஆனால் நான் உங்களைப் போன்று அடிமட்டத்திலிருந்து வந்தவன். வைத்திலிங்கம் போன்று அதிகாரம் பிடித்து அலையவில்லை.

ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ்., வந்தாலும் சரி, அ.தி.மு.க.,வில் துரோகிகளுக்கு இடமில்லை. ஜெயலலிதா சட்டசபை முன்பு கூறினார், எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகள் இருக்கும் என கூறினார். அவர் மறைவுக்குபிறகு எவ்வளவு சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம், முதலில் ஓ.பி.எஸ்., தர்மயுத்தத்தை தொடங்கினார். மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். இந்த அதிமுக ஆட்சியை கலைக்க எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓ.பி.எஸ்., அவரை எந்த அ.தி.மு.க., தொண்டனும் மன்னிக்கமாட்டார்.  ஆனால் அவருக்கு நாம் ஒருங்கிணைப்பாளர் எனவும், துணை முதல்வர் எனவும் பதவியை கொடுத்தோம். இதைவிட அவருக்கு என்ன வேண்டும். கட்சியினர் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும்.  ஓ.பி.எஸ்., வைத்திலிங்கத்தின் வஞ்சகமும் நாடகமும் பலிக்காது. நீங்கள் யாரோடு சேரக்கூடாது என எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நினைத்தார்களோ, தீயசக்தி என கூறினார்களோ, ஜெயலலிதாவின் உயிர் போக காரணமாக இருந்தார்களோ, அவர்களைச் தேடிச் சென்று திமுகவுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டு கொண்டி இருக்கீறீர்கள்.

மேலும் படிக்க | திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு வர வேண்டும் - விசிகவுக்கு வானதி அழைப்பு

தினகரனை ஜெயலலிதா 10 ஆண்டு காலம் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டவர். ஆனால் அவர் அ.தி.மு.க., கட்சியினரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, அ.ம.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டார். இன்றைக்கு நிலமை என்ன, யார் துரோகி என கூறினார்களோ, இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்.  தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே உள்ளது. அதே போல் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்.  இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும். தமிழகத்தில் கொலைகளின் எண்ணை 2021 ம் ஆண்டில் 1597 எனவும், 2022,2023 என எல்லா ஆண்டுகளிலும் 1597 என கூறி, கொலைகளின் எண்ணிக்கையிலும் இந்த திமுக அரசு மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டன உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கம்பி, சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  டெல்டாவில் திமுக ஆட்சி காலத்தில் தான் மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதி வழங்கி, விவசாயிகளின் நிலங்களை  பாலைவனமாக்க முயன்றது. ஆனால் அதிமுக அரசு விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசிடம் வாதாடி, போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை பாதுகாத்தது. தி.மு.க., எப்போதும் விவசாயிகளுக்கு துரோம் செய்து தான் வருகிறது. இதனை இப்பகுதி விவசாயிகள் உணர வேண்டும்.  கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. நடந்தாய் வாழிக் காவிரி என்ற திட்டத்தில் அசுத்த நீரை வெளியேற்ற திட்டம் தீட்டி மத்திய அரசிடம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அனுப்பினோம். இது தொடர்பாக நாடாளுமன்ற, மக்களவைக் கூட்டுக்குழுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 38 எம்பிக்களும் இதுவரை பேசவில்லை.  அதிமுக கட்சி தற்போது புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்றார்.

மேலும் படிக்க | M. K. Stalin: முதல்வர் விழுப்புரம் பயணம்-கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News