திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! அதிக தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதால், திமுக இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்காமல் இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2024, 07:00 PM IST
  • திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்
  • அதிக தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்
  • திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திட்டம்
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! அதிக தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள் title=

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சியை தவிர்த்து 2019 ஆம் ஆண்டு இணைந்து போட்டியிட்ட கட்சிகள் அப்படியே இருக்கின்றன. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலிலும் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட இருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுடனும் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | ஆளுநர் என்ட்ரி முதல் எக்ஸிட் வரை... சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - தலைவர்களின் ரியோக்சன்!

இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கையையும், பெயர்களையும் கொடுத்துள்ளன.  இது குறித்து திமுக தீவிரமாக ஆலோனை நடத்தி வருகிறது. திமுக இப்போது இருக்கும் நிலைப்பாடு என்னவென்றால் காங்கிரஸை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு கடந்த முறை எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்கவே தயாராக இருக்கிறது. யாருக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. காங்கிரஸூக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் கடந்தமுறை திமுக ஒதுக்கியது. அதை குறைக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. 

10 தொகுதிகள் என்பதெல்லாம் காங்கிரஸூக்கு அதிகம், அந்தளவுக்கு பலம் எல்லாம் தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு இல்லை என திமுக நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனர். அக்கட்சிக்காக வேலை செய்வதற்கு பதிலாக திமுக வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என திமுக மூத்த நிர்வாகிகளே தெரிவிக்கின்றனர். இதனையும் திமுக தலைமை பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸூக்கு புதுச்சேரி உட்பட 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக இப்போதைக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தையிலேயே திமுக இதனை தெரிவித்துவிட்டது. இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய தொல்.திருமாவளவன், விசிக-வுக்கு 3 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதியை ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து பரிசீலிப்பதாக திமுக தெரிவித்திருக்கிறது. இருப்பினும் விசிகவுக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளையே ஒதுக்க திமுக தயாராக இருக்கிறது. ஏனென்றால் இம்முறை ஆட்சியில் இருப்பதால் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவும் திமுக முடிவெடுத்திருக்கிறது. இது கூட்டணிக்குள் மனக்கசப்பை உருவாக்கும் என்று தெரிந்திருந்தாலும், தங்களது நிலைப்பாட்டில் பின்வாங் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால், திமுக கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News