விவசாயிகளுக்கு விரோதமான சட்டம் - DMK மற்றும் தோழமை கட்சிகள் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 21, 2020, 12:40 PM IST
  • 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.
  • மூன்று புதிய மசோதாக்கள் - கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
  • நேற்று மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு விவசாய மசோதாக்களை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது.
விவசாயிகளுக்கு விரோதமான சட்டம் - DMK மற்றும் தோழமை கட்சிகள் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் title=

CHENNAI: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்கள் தலைமையில், விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள் (Three Bills on Agriculture) குறித்து, அதன் கூட்டணி கட்சிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தி`ல் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ, கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி எம்.எல்.ஏ., மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயத் துறையைச் சீர்திருத்துவதற்கான நரேந்திர மோடி அரசாங்கத்தின் (Narendra Modi government) சமீபத்திய நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரமாக ஒரு அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளன, பஞ்சாப் (Punjab Farmers) மற்றும் ஹரியானாவில் (Haryana Farmers) ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச உறுதி விலை வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

ALSO READ |  மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 MP-கள் சஸ்பெண்ட்!!

மூன்று புதிய மசோதாக்கள் - கடந்த வாரம் வியாழக்கிழமை மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் (Lok Sabha) நிறைவேற்றப்பட்டன. நேற்று மாநிலங்களவையில் (Rajya Sabha) பல்வேறு அமளிகளுக்கிடையில் மூன்றில் இரண்டு விவசாய மசோதாக்களை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக தனியார் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விற்க எளிதாக்கும், அதே நேரத்தில் இந்தத் துறையில் முதலீட்டை ஊக்கப்படுத்தும் மற்றும் தற்போதைய கட்டுப்பாடுகளையும் தளர்த்தும்.

ALSO READ |  மத்திய அரசின் விவசாய மசோதாக்களை BJP-ன் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றன

முன்னதாக மக்களவையில் நிறைவேறிய வேளாண்துறை சம்பந்தமான 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா நகல்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.

Trending News