தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேல ரத வீதி பகுதியை சேர்ந்த இந்து ப்ரியா தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரிக்குள் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி ஆசிரியர் ஒருவர் இந்துப்பிரியாவைத் திட்டியுள்ளார். இதற்காக மன்னிப்புக் கடிதமும் எழுதிக் கேட்டுள்ளார். ஆனால் அந்த செல்போன் இந்துப்பிரியாவுடையது இல்லை என்றும், வேறொரு மாணவியுடையது என்றும் சொல்லப்படுகிறது. அந்த மற்றொரு மாணவியிடம் ஆசிரியர் எந்த மன்னிப்புக் கடிதமும் கேட்காமல், இந்துப்பிரியாவிடம் மட்டும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த இந்துப்பிரியா அவரது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவங்களை எல்லாம் கடிதமாக எழுதிவைத்துவிட்டு இந்துப்பிரியா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும் படிக்க | சாதி, மத மோதல்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் - மு.க.ஸ்டாலின்
தன்னைத் திட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புளியங்குடி போலீஸார், மாணவியின் கடிதத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR