தீபாவளி திருநாள் தலைவர்களின் வாழ்த்துக்கள்!

Last Updated : Oct 17, 2017, 07:38 PM IST
 தீபாவளி திருநாள்  தலைவர்களின் வாழ்த்துக்கள்! title=

தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீப ஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தங்களின் துன்பங்கள் நீங்கி, செழிப்பான வாழ்வு வாழ, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், இறைவனைப் போற்றி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி, வாழ்த்துக்களைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்:

1 தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

நாடெங்கும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி முதல்வர் பழனிசாமி தனது தமிழக மக்கள் அனைருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள். மறம் வீழ்ந்து அறம் வென்ற நாளாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது. தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும். இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என கூறியுள்ளார்.
 
2 கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு தீபாவளி  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

3 டாக்டர் .தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். 

1 பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீப ஒளி திருநாளில் எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகரன் ஒளிந்ததுபோல நம் நாட்டில் உள்ள லஞ்சம், ஊழல், கருப்புபணம், ஒழிக்கப்பட்டு அரசாங்கத்தின் நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கட்டும்.  

4 தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். 

அனைத்து மக்களும் இன்பத்தையும், நிம்மதியையும் பெற்று தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடவேண்டுமென தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும்; வறுமையும், சுரண்டலும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிய வேண்டும் என்பன உள்ளிட்ட நமது இலக்குகளை வென்றெடுப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

Trending News