தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஒரு நாள் தொற்றின் அளவு, மெல்ல மெல்ல குறையத் தொடங்கி, தற்போது 3, 500-க்கும் கீழே வந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா பரவலை (Corona Spread) கட்டுபடுத்த தமிழகத்தில் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு (TN Lockdown) அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ALSO READ | கொரோனா: இந்த வயதினர்களுக்கு அதிகம் பாதிப்பு; ICMR அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியீடு
அதன்படி சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஜூலை 5ஆம் தேதி வரை 26,58,675 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி முன்னதாக தெரிவித்து இருந்தது. இதனால் பல இடங்களில் தடுப்பூசி இல்லை என்ற பலகை வைக்கப்பட்டது. ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வரும் நேரத்தில், இதுபோன்ற தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முகாமிற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் அந்த தடுப்பூசிகள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னையில் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe