புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை நவம்பர் வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு..!
புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. மத்திய அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்திய போது மதுபான கடைகளும் திறக்கப்பட்டன.
ஆனால் மதுபான கடைகளை திறந்த பல மாநிலங்கள் புதியதாக கொரோனா வரி என மதுபானங்கள் மீது விதித்தன. இதனால் மதுபானங்கள் விலை மிக மிக கடுமையாக உயர்ந்தன. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும் என்பதால் தமிழக குடிமகன்கள் அங்கு அதிகம் செல்வது வாடிக்கை. ஆனால், கொரோனா லாக்டவுன் காலத்தில் கொரோனா வரியுடன் மதுபான கடைகளை திறந்தது புதுவை.
ALSO READ | E - Pass: ஹேப்பி நியூஸ்......புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து....
இதனால், புதுவையில் மதுபானங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது. தமிழக மதுபான கடைகளின் விலைகளை புதுவையில் சரக்குகள் விலை கூடுதலாக இருந்தது. புதுவையில் 3 மாதங்களாக மதுபானங்கள் மீதான கொரோனா வரி அமலில் இருந்து வந்தது. தற்போது மதுபானங்கள் மீதான கொரோனா வரியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வரும் நவம்பர் மாதம் வரை புதுவையில் மதுபானங்கள் விலை மிக கடுமையான உயர்வுடனேயே இருக்கும்.
இது குறித்து மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கபப்டுவதாகத்’ தெரிவித்துள்ளார்.