அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு ஒரு நூலுக்கு இளையராஜா எழுதியுள்ள முன்னுரை மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா குறித்து ஏகப்பட்ட எதிர்வினைகள் இணையமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. நெட்டிசன்களும் தங்கள் பார்வையை முன்வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் தரக்குறைவாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்யக்கூடாது என்று பல்வேறு தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாஜக தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், விமர்சனம் நின்றபாடில்லை. இளையராஜாவின் வார்த்தையில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் சில்லறைத்தனமாக அரசியலுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. குடியரசுத் தலைவருக்கான தேர்வில் இளையராஜாவின் பெயரும் இருப்பதாகவும் உண்மை எது, பொய் எது என இனம் பிரித்தறிய முடியாத அளவுக்குத் தகவல்கள் உலா வருகின்றன. இப்படி இளையராஜாவைச் சுற்றிச் சுழன்றே அரசியல் களம் நகர்ந்து வருகிறது. இச்சூழலில் இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா, திராவிடன், தமிழன் என்று பதிவிட்ட ட்வீட் வைரலானது. திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் இளையராஜாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
இச்சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில், இங்கே வேறெந்தப் பிரச்சினையும் இல்லையா என்று இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ''இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?
மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும், ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?'' என்று தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவுக்குக் கீழேயும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் இசையமைப்பாளர் தாஜ்நூர் தங்கர்பச்சானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ''உண்மைதான் … நீங்கள் கூறியதுபோல் நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க அதை விட்டுவிட்டு .. இதை நீங்கள் பதிவிட என்ன காரணம்?'' என்று தாஜ்நூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR