கூடங்குளம் அணு மின் நிலையத்தின் யூனிட் 5 & 6 கட்டுமானப் பணிகள் துவக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான கூடங்குளத்தில்  5 & 6ம் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2021, 04:24 PM IST
  • இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையம்.
  • KKNP ரஷ்ய கூட்டமைப்புடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டவை.
  • பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்பட்ட, பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆலையில் உள்ளது
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் யூனிட் 5 & 6  கட்டுமானப் பணிகள் துவக்கம்  title=

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் (KKNP) 5 மற்றும் 6வது அணு உலைக்கான கட்டுமானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி  நிலையமான KKNP ரஷ்ய கூட்டமைப்புடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்டவை. ஆலை, பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், மிக உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்பட்ட, பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இந்த ஆலையில் உள்ளது

ரஷ்யா (Russia) உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது மற்றும் இரண்டாவது அணு உலைகளில் முறையே 2014-ம் ஆண்டும்,  2016-ம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  2016 அக்டோபர் 15ம் தேதி பிரதமர் மோடியும் (PM Modi), ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் இதனை தொடங்கி வைத்தனர். தற்போது 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது

இந்த நிகழ்வை மெய்நிகர் முறையில் அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான கே.என். வியாஸ், ROSATOM இயக்குநர் ஜெனரல், டாக்டர் அலெக்ஸி லிக்காச்சேவ் (Alexey Likhachev) மற்றும் நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்  தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.கே.ஷர்மா முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அணுசக்தித் துறை, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் M/s Larsen & Toubro  ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ALSO READ | Rameswaram கரையருகே துர்நாற்றம் வீசும் நுரை; MV X-Press Pearl கப்பலின் ரசாயனக் கசிவா?

"பல ஆண்டுகளாக கூடங்குளம் அணு மின்  கட்டுமான திட்டம் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் அடையாளமாக இருந்து வருகிறது. அதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நாங்கள் மேலும் செயல்பட்டு வருகிறோம். ரோசாட்டோம் அனைத்து மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது. எங்கள் இந்திய சகாக்களுடன் சேர்ந்து, இந்தியாவில் ஒரு புதிய தளத்தில் அதிநவீன மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்துடன்  ரஷ்யாவினால் வடிவமைக்கப்பட்ட அணுசக்தி அலகுகளின் தொடர் கட்டுமானத்தை தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று ரோசாட்டம் இயக்குநர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் (Alexey Likhachev) விழாவின் போது கூறினார்.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாஷேவ் (H.E. Mr Nikolay Kudashev) கூறுகையில், “கூடங்குளம் அணு மின் நிலயத்தின் 5 வது அணு உலை கட்டுமான இடத்தில் இன்று கட்டுமான பணி தொடங்கியது, இது ரஷ்ய-இந்திய அணுசக்தி ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாகும் " என்றார்.

ALSO READ | நீட் தேர்வில் SC தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News