மேட்டூர் அணை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு!

காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை என முதல்வர் பழனிசாமி  கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 

Last Updated : Jun 8, 2018, 12:40 PM IST
மேட்டூர் அணை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு! title=
12:37 08-06-2018
 
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை என முதல்வர் பழனிசாமி  கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 
 

காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 
 
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் ஜூன் 12 தேதி வரை நீர் திறக்க முடியாது என சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என தெரிவித்தார். இந்தாண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 

Trending News