வேலூர் மத்திய சிறையில் பெட்ரோல் நிலையம் திறந்து வைத்தார் முதல்வர்!

கோயம்பத்தூர், பாளையங்கோட்டை மற்றும் புதுக்கோட்டை - பார்ஸ்டல் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகங்களில் அமைக்கப்பட்டு பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Last Updated : Feb 23, 2019, 11:14 PM IST
வேலூர் மத்திய சிறையில் பெட்ரோல் நிலையம் திறந்து வைத்தார் முதல்வர்! title=

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் கோயம்பத்தூர், பாளையங்கோட்டை மற்றும் புதுக்கோட்டை - பார்ஸ்டல் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகங்களில் அமைக்கப்பட்டு பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

குற்றவாளிகளை சிறையில் அடைத்து, அவர்களை சீத்ரிருத்தி மீண்டும் சமுதாயத்தில் இணைந்து புத வாழ்வு தொடங்குவதற்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கும் பணியில் மேற்கொண்டு வரும் சிறைத் துறையினரின் மேம்பாட்டிற்கா புதிய சிறைச்சாலை கட்டுதல், குடியிருப்புகளை கட்டுதல் போன்ற திட்டங்களை சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் சிறை அங்காடிகள் அமைத்தல், நவீன அடுமனைக்கூடம் கட்டுதல், சிறை தொழிற்கூடங்களில் உள்ள பழைய இயந்திரங்களுக்கு மாற்றாக புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதன்மூலம் சிறைத்துறைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மற்றும் வாடகையாக மாதம்தோறும் சுமார் 2,31,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். மேலும் இத்திட்டத்தின் மூலம் தண்டனை சிறைவாசிகள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், பொருளாதார ரீதியாக உயர்வதற்கும் வழிவகை ஏற்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News