கோலாகலமாய் தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மக்கள் புடை சூழ கோலாகலமாக தொடங்கியுள்ளது!

Last Updated : Jul 7, 2019, 11:48 AM IST
கோலாகலமாய் தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்! title=

ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மக்கள் புடை சூழ கோலாகலமாக தொடங்கியுள்ளது!

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி நடராஜர் ஒவ்வொரு நாளும் தங்கம், வெள்ளி, ரிஷப, யானை உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

8-ம் நாள் விழாவான நேற்று காலை தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும, இரவில் பிஷாடனர், வெட்டுங் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலாமாகத் தொடங்கியுள்ளது விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளிய ஐந்து தேர்களும் பக்தர்களின் சிவ கோஷத்துடன் சிதம்பரம் நகரில் வலம் வருகின்ன்றன. 

இந்த நிகழ்வில் சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

 

Trending News