உறவுக்கு மறுத்த மனைவி கொலை; கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை

உறவுக்கு  மறுத்த மனைவியை கொன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2023, 03:04 PM IST
உறவுக்கு  மறுத்த மனைவி கொலை; கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை  title=

சென்னை அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அம்மு. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அம்முவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்த சீனிவாசன், மனைவியை கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் அம்மு அதனை கண்டுகொள்ளவில்லை.

மேலும் படிக்க | Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு  உறவுக்கு மறுத்ததால், இருவருக்கும் இடையே  தகறாறு ஏற்பட்டுள்ளது. மேலும், தன்னுடைய உறவினர் மகனுடன் தான் உறவு கொள்ள முடியும் என அம்மு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன்,  அம்முவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக், திடீரென ஏற்பட்ட ஆத்திரத்தில் அம்முவை  சீனிவாசன் கொலை செய்துள்ளார் என்றும், திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் கூறி, அவருக்கு  குறைந்தபட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: சிவராத்திரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல நேரம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News