‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ - சென்னை மக்களுக்கு மேயர் பிரியா ‘அட்வைஸ்’

Mayor Priya Advices Chennai People : சென்னை மேயர் பிரியா வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளார். எதற்குத் தெரியுமா ? சென்னை மக்களையும் அதே மாதிரி கடைப்பிடிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளார்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 9, 2022, 02:03 PM IST
  • உலகம் முழுவதும் அச்சுறுத்தும் ‘குப்பை’ அரசியல்
  • குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி
  • சென்னை மேயர் பிரியா ராஜன் முன்னெடுத்த முயற்சிக்கு வரவேற்பு
‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ - சென்னை மக்களுக்கு மேயர் பிரியா ‘அட்வைஸ்’ title=

உலகம் முழுவதும் குப்பை அரசியல் பெரும் விவாதமாக மாறிக்கொண்டிருக்கிறது. வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளிடம் தங்களது குப்பைகளைக் கொட்டுகின்றன. குறிப்பாக, வல்லரசு நாடுகள் என சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மூன்றாம் தர நாடுகளான ஆப்பிரிக்க நாடுகளில் தங்களது குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. 

மேலும் படிக்க | மதுபாட்டில் திட்டம் - நீலகிரியை சுட்டிக்காட்டி நீதிமன்றம் சொன்ன ‘அட்வைஸ்’.!

குப்பைகளைக் கொட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடம், மனிதர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்க வேண்டும் என்பது உலக நியதி. ஆனால், யதார்த்தம் அப்படி இருப்பதில்லை. 

சமீபத்தில் சென்னை அருகே உள்ள பள்ளிக்கரக்கணை சதுப்புநிலங்களில் கொட்டப்படும் குப்பைகளை நீக்குமாறு நீதிமன்றமே தலையிட்டு ஆணையிடும் அளவுக்கு இந்தப் பிரச்சனை பல்வேறு பகுதிகளில் விஸ்வரூபமெடுக்கிறது. 

குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே அத்தனைக் குப்பைகளையும் கொண்டுவந்து மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கொட்டுகின்றனர். கிட்டத்தட்ட மலைபோல் குவியும் குப்பைகளில் அடிக்கடி தீ பற்றிக் கொள்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றமும், பெரும்புகையும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்று நிரூபணமாக்கும் வகையில் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பெரும்பாலான உடல் உபாதை பிரச்சனைகள் தொடங்கியிருக்கின்றன. 

chennai trash

இதனால் பல தரப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி புதிய முயற்சி ஒன்றை கையெலெடுத்துள்ளது. அதாவது, குப்பைகளை இரண்டாக பிரித்து தனித்தனியாக்குவது!.
மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரிப்பது என மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன் முதல்படியாக, சென்னை மேயர் புதிதாக ஒரு ட்வீட் செய்துள்ளார். 

அதில், ‘எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். 

mayor priya rajan

அதாவது, சென்னை மாநகராட்சியில் அந்தந்த ஏரியாவுக்கு வரும் குப்பை வண்டிகளில் இரண்டு வகையான பெட்டிகள் இருக்கும். ஒன்றில் மக்கும் குப்பைகளைக் கொட்ட வேண்டும். மற்றொன்றில் மக்காத குப்பையை கொட்ட வேண்டும். இதற்கு முதலில், அனைவரும் வீட்டில் இரண்டு குப்பைத் தொட்டிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு ‘குட்-பை’ - வண்டலூர் பூங்கா அதிரடி நடவடிக்கை

இந்த மாபெரும் குப்பை தரம் பிரிக்கும் சவாலை மேலும் சிலருக்கு சென்னை மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் சுற்றுபுறத்துக்காகவும், சுகாதார சென்னைக்காகவும் இந்த முயற்சியை விழிப்புணர்வு இயக்கமாக பலரும் ஏற்று முயன்று வருகின்றனர். இதன் மூலம் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, அதன் குப்பைகளை தனியாக சேகரிக்கும் மாபெரும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. இதனை முயன்றுபார்க்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்த சென்னை மேயர் பிரியா ராஜன், ‘நம்ம சென்னை நம்ம பொறுப்பு !’ என்று சொல்லி அசத்துகிறார்.! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News