சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ளன. அது மட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இழந்த வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றின் குறைந்தபட்ச மதிப்பு மட்டும் ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.