CBSE பள்ளியில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது -CBSE!

CBSE பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் இருக்காது என CBSE தரப்பிலான சுற்றறிக்கை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jul 11, 2018, 12:00 PM IST
CBSE பள்ளியில் 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது -CBSE! title=

CBSE பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் இருக்காது என CBSE தரப்பிலான சுற்றறிக்கை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது!

தனியார் CBSE  பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்க கூடாது என உத்தரவிட்டு, இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படியும், அதுசம்பந்தமாக அறிக்கை அளிக்கும்படியும், அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

 

Trending News