பண பேர வீடியோ ஆதாரம்; ஆனால் பேச அனுமதிக்கவில்லை -ஸ்டாலின் குற்றச்சாட்டு

Last Updated : Jun 16, 2017, 01:13 PM IST
பண பேர வீடியோ ஆதாரம்; ஆனால் பேச அனுமதிக்கவில்லை -ஸ்டாலின் குற்றச்சாட்டு title=

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்.ஏ சரவணன்  வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தினார்கள். ஆனால் அவைத்தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.

சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-

பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதேபோல நேற்று  சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-

கூவத்தூர் வீடியோ விவகாரம் தொடர்பாக இன்றும் கேள்வி எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால், சபாநாயகர் இதற்கும் அனுமதி மறுத்தார். கோர்ட்டில் உள்ள வழக்கு குறித்து சட்டசபையில் பேசலாம். தீர்ப்பு அல்லது கோர்ட் செயல்பாடு குறித்து தான் விவாதிக்க கூடாது. 

வீடியோ குறித்த வழக்கை எடுத்து கொள்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து வரும் 16-ம் தேதி தான் கோர்ட் முடிவு செய்யும். இதனால், சட்டசபையில் பேசுவது தவறு கிடையாது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபையில் உள்ளனர். விவாதம் முடிந்தால், அவர்களும் பதிலளிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும் அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்துவிட்டார். எங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், வெளிநடப்பு செய்துள்ளோம் என அவர் கூறினார்.

Trending News