ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
மதுரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ரயிலை சிறைப்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது போலீசார் கூறியதை கேட்டு போராட்டத்தை கைவிடுவதாக கூறி மக்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என தமிழக முழுவது போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசரச்சட்டம் பிறப்பித்து. ஆனால் போராட்டகாரர்கள் அவசரச்சட்டம் வேண்டாம், எங்களுக்கு நிரந்தர சட்டம் தான் வேண்டும் என போராட்டத்தைத் தொடர்ந்தனர். அரசு தரப்பில் அமைதியான முறையில் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல கூறப்பட்டது. ஆனால் சில போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதனால் காவல்துறையினர் வலுகட்டாயமாக அவர்களை வெளியேற்றினர். லேசான தடியடி நடத்தினார்கள். பிறகு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தை தீ வைத்தனர். இதில், காவல்நிலையம் முன்பு நின்றிருந்த 15 பைக்குகள் பற்றி ஏரிந்து நாசமாகின. மேலும் 22 காவல்துறையினரும் காயமடைந்தனர்.
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் கோயில் வாயில் வளைவு அருகே போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் மூண்டது. போராட்டக்காரர்கள் டயரை எரித்து காவல்துறையினர் மீது ஏறிந்தனர். பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
பிரெசிடென்சி கல்லூரியில் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். அயோத்தி குப்பம், நடுக்குப்பம் பகுதியில் மர்மநபர்கள் தீவைப்பு. அவ்வை சண்முகம் சாலையில் போலீசார் தடியடி.
சென்னை கானாத்தூர் அருகே மீனவர்கள் சாலை மறியல். சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து முடக்கம். தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் டிவி தடை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர் அரசுப் பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. பேருந்துகளை நோக்கி போராட்டக்காரர்கள் கல்வீசியதில் பயணிகள் பலர் காயமடைந்தனர்.
மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்கள் குழந்தைகளை சீக்கிரம் வந்து பத்திரமாக அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு தெரியப்படுத்தி உள்ளன.
மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் ஆகிய இடங்களிலும் பதற்றமான சூழலே நிலவுகிறது. கோவை வ.உ.சி. பூங்காவில் 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
மெரீனாவுக்கு வரும் 9 சாலைகளை பயன்படுத்த வேண்டாம். மாணவர்கள் போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவல். பொதுமக்கள் வீடுகளை விட்டு வரக் கூடாது என காவல்துறை கூறியுள்ளது.