மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின. இதில் 950க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியதும், காளைகள் துள்ளிகுதித்து சீறிப்பாய்ந்தன. முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.
அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.
பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு உள்ளனர்.
#WATCH: #Jallikattu event organized in Tamil Nadu's Madurai pic.twitter.com/s9HWo2LXIH
— ANI (@ANI) January 14, 2018