நாமக்கல்: குடும்பம் என்பது வாழ்க்கையின் அடிப்படை. ஆனால், குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறும் சண்டையுமே, குடும்பங்களை நிர்மூலமாக்கிவிடுகின்றன என்பதற்கு உதராணமான கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குடும்பத்தகராறில் சகோதரர்கள் இருவர் ஒன்றாக சேர்ந்துக்கொண்டு, உடன் பிறந்த சகோதரனை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் - பூங்கொடி தம்பதிகளுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனந்தன் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார்.
ALSO READ | திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை
ஆனந்தனின் மூன்றாவது மகன் குரு மதுபான பாரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மூத்த சகோதரர்கள் கார்த்தி மற்றும் தம்பியை அடித்துள்ளனர்.
இதைத் பார்த்த தந்தை ஆனந்தன் தடுக்க சென்றுள்ளார். அப்பொழுது ஆனந்தனை கீழே தள்ளிவிட்டு குருவின் மீது கற்களால் தாக்கிய அண்ணன்கள், தலையை காயப்படுத்தினார்கள்.
அப்போதும் ஆத்திரம் தீராத அண்ணன்கள், அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து குருவின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீஸார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குருவை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குரு உயிரிழந்தார்.
இந்த கொலை விவகாரம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குரு தனது தாயார் பூங்கொடியை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த மகன்கள் கார்த்தியும் அசோக்கும், தம்பியை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தற்போது, தலைமறைவாக உள்ள சகோதரகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ALSO READ | மூதாட்டி பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR