Health Tips In Tamil: கோவக்காய் குறித்து நிச்சயம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால், அதனை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்திருக்கிறீர்களா என கேட்டால் நிச்சயம் பலரும் இல்லை என்றுதான் சொல்வீர்கள். ஊட்டச்சத்து நிறைந்த கோவக்காய் பல்வேறு உடல்நல பிரச்னைகளை போக்கவல்லது. இருப்பினும் இதை பெரும்பாலானோர் உண்ணாமல் தவிர்ப்பதை பார்க்க முடியும். கோவக்காயை விரும்பி உண்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
கோவக்காயை அவித்து, அதை நன்கு வதக்கி, மசாலாக்களை சேர்த்து உண்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக கோவக்காயில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. வைட்டமின் சி வைட்டமின் ஏ பொட்டாசியம் மெக்னீசியம் கொண்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி செரிமானத்தை சீராக்கி உங்களின் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குறிப்பாக கோவக்காயில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைப்பதிலும் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் இதில் இயற்கையாகவே ஆண்டிஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் அலர்ஜிகள் வராது, கெட்ட செல்கள் வெளியேறும். அந்த வகையில் கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
குடல் ஆரோக்கியம்
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான அமைப்புக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். குடல் இயக்கத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும், செரிமானத்தை எளிமையாக்கும்.
மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்
சிறுநீரக ஆரோக்கியம்
கோவக்காய் அதிகமாக சாப்பிடுவதால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால், உடலில் உள்ள நச்சுக்களை, தேவையற்ற நீர்களையும் வெளியேற்ற உதவும். சிறுநீரக கல் ஏற்படுவதை தவிர்க்கும்.
சரும ஆரோக்கியம்
இதில் வைட்டமின்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக வைட்டமின் சி கொலாஜன் தயாரிப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இது சருமத்திற்கு இலகுத்தன்மை கொடுத்து சுருக்கங்களை தவிர்க்கிறது.
உடல் எடை குறைப்பு
கோவைக்காயில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கொழுப்புகள் இருப்பதால் உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி தேவையற்ற பசியை தடுக்கும். இதன்மூலம் நீங்கள் நொறுக்கு தீனியையும் தவிர்ப்பீர்கள். இதனை தொடர்ச்சியாக உட்கொள்ளவதால் உடல் எடை குறைப்புக்கு பேருதவியாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்கும்
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின்கள் சளி போன்ற தொற்றுகளிடம் இருந்தும் உடலை பாதுகாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ