கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண், ஒசூர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார்.அவரை முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(24) என்னும் இளைஞர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தை வெங்கடசாமி என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, உன் மகளை கடத்திவிட்டோம். 10 லட்சம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் படிக்க | சென்னை அண்ணா சாலையில் கட்டடம் அனுமதியின்றி இடிப்பு - இளம்பெண் பலி
உடனே அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளை உறவினர்களுடன் இணைந்து தேடத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரைப் பற்றி தகவல் இரவு முழுவதும் தெரியவில்லை. இந்நிலையில் இன்று இராமன்தொட்டி என்ற இடத்தில் இளம் பெண் மர்மமான முறையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். வனப்பகுதியான அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்து அங்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரதேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஸ்ரீதர் தனது காதலியை நேற்று மாலை வெளியில் செல்வோம் என அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, ஸ்ரீதர் இராமன்தொட்டி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று முதலில் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதில் பயந்த அந்த இளம் பெண் தன் அக்காவுக்கு தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டுள்ளார். உரிய பதில் கிடைக்காததால் அந்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்த செல்போன் உரையாடலையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு பேரிகை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ