விஜய் பிறந்தநாளில் சாகசம் செய்த சிறுவன்... கையில் பற்றிய தீயினால் பரபரப்பு..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரத்ததான முகாம், அன்னதானம், சிறுவனின் சாகசம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 22, 2024, 02:24 PM IST
விஜய் பிறந்தநாளில் சாகசம் செய்த சிறுவன்... கையில் பற்றிய தீயினால் பரபரப்பு..!! title=

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவை மீறி அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற நலதிட்டம் வழங்கும் விழாவில் கையிலும், ஒட்டிலும் பெட்ரோல் ஊற்றி ஓட்டை உடைத்து சாகசம் செய்ய முயன்ற சிறுவனின் கையிலும், பயிற்சியாளரின் கையிலும் தீப்பிடித்து காயம் ஏற்பட்ட நிலையில் சிறுவன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர். சரவணன் தலைமையில் நலத்திட்டம் வழங்கும் விழா, ரத்ததான முகாம், அன்னதானம், சிறுவனின் சாகசம் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. 

முன்னதாக சின்ன நீலாங்கரையில் உள்ள ஶ்ரீ முத்தம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்துவிட்டு பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் ஊர்வலமாக ஈசிஆர் சாலையில் சென்று நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சென்றனர். 

திருமண மண்டபத்தில் முன்னதாக சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜபதி- பிரியா தம்பதியின் மகன் கிரிஷ்வா(11), 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கராத்தே மாஸ்டர் ராஜன் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்தநாள் விழாவில் சிறுவன் சாகசம் செய்து காட்டினர். சிலம்பம், ஸ்கேட்டிங், வாள் சுற்றுதல், தீப்பற்ற வைக்காமல் 5 ஓடுகளை வைத்து உடைத்தார். பின்னர் 3 ஓடுகளை வைத்து ஓட்டின் மீதும், சிறுவன் கையிலும் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து கையால் அடித்து உடைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுவன் கையில் தீப்பிடித்து எரிந்தது. 

உடன் இருந்த கராத்தே மாஸ்டர் ராஜன், மற்றும் விஜய் கட்சியினர் தீயை அணைக்க முற்பட்டனர் அப்போது மாஸ்டர் கையில் மூடாமல் சிறிய தன்னர் கேனில் இருந்த பெட்ரோல் தீ பிடித்து ஏறியும் சிறுவன் மீது ஊற்றி தீ மேலும் பரவியது. பின்னர் தீயை அணைத்தனர். இதில் சிறுவன் மற்றும் மாஸ்டர் ராஜனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. 

இருவரும் அதேபகுதியில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

மேலும் படிக்க | 'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?

பின்னர் தீக்காயமடைந்த சிறுவனின் தாயார் பிரியா பேசுகையில்:-

என் மகனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது நன்றாக இருப்பதாகவும், இது போன்ற பல சாகசங்கள் செய்துள்ளார் எதிர்பாராத விதமாக நடைபெற்றது. எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும் எனக்காக இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவனுக்கும் விஜயை பிடிக்கும், பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருந்தோம். இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். 

சாகசம் செய்த சிறுவன் பேசுகையில்:

15 உலக சாதனை செய்துள்ளேன், இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தீப்பற்றியது, இது சகஜம் தான், வலி குறைவாக உள்ளது, ஓடு மற்றும் கைகளில் பெட்ரோல் ஊற்றுவது வழக்கமான ஒன்று தான்.

மேலும் படிக்க | நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News