பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, திமுக எம்பி மற்றும் அரசியல்வாதியான கனிமொழியைப் பற்றி தகாத வார்த்தையிலும், பெரியார் சிலையை உடைப்பது குறித்தும் கருத்து தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக தற்போது சிக்கலில் சிக்கி உள்ளார். இந்த இரண்டு வெவ்வேறு வழக்குகளுக்கு சென்னையில் உள்ள எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கனிமொழியை விமர்சித்தும் X தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். ஹெச்.ராஜாவின் இந்த கருத்து தொடர்பாக ஈரோடு நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 3000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?
சென்னையில் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் போன்ற அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் இதனை விசாரித்து வந்தார். விசாரணையில், பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியதற்கு ஆதாரம் இல்லை என்றும், கனிமொழி குறித்தான தனது கருத்து அரசியல் ரீதியானது என்றும் எச். ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக கனிமொழி நேரடியாக புகார் கொடுக்காவில்லை என்றும், வேறொருவர் புகார் கொடுத்ததால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. நீதிபதி ஜெயவேல் எச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த இரண்டு வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது. எனவே எச்.ராஜா குற்றவாளி என்றும், இரண்டு வழக்குகளிலும் சேர்த்து தல ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எச். ராஜா மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
போர் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "31ம் தேதிக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எனது போராட்டம் தொடரும். இந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு சித்தாந்தத்திற்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறேன். அந்த போராட்டத்தில் எந்த பிரச்சனையும் எதிர்கொள்வேன்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க - “எங்களுக்கு பயமா இருக்கிறது” செந்தில் பாலாஜி ஜாமீன் மீது உச்சநீதிமன்றம் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ