தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்; கேரள கோழிகள் தமிழகம் வர தடை!

பறவைக் காய்ச்சல் தீவிரமடையும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 08:57 AM IST
    1. பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு
    2. கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை
    3. கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் உத்தரவு
    4. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவு
தீவிரமடையும் பறவைக் காய்ச்சல்; கேரள கோழிகள் தமிழகம் வர தடை! title=

பறவைக் காய்ச்சல் தீவிரமடையும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு..!

கொரோனாவுக்கு (Coronavirus) போட்டியாக இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், புதிய உயிர்க்கொல்லி நோய் ஒன்று கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 250-க்கும் மேற்பட்ட காகங்கள் பலியானதை அடுத்து பறவைக்காயச்சல் (Bird flu) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. H5N1 வைரஸால் ஏற்படும் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்று மிகவும் ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் (Kerala) பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயத்தில் வாத்து மற்றும் கோழிகள் திடீரென செத்து மடிந்தன. இதனால் இறந்த வாத்துகளில் இருந்து எட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் “H5N1” வகை வைரஸ் என்று சொல்லப்படும் பறவைக்காய்ச்சலால் (Bird flu) இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில் ஒரு Km தொலைவில் உள்ள கோழி மற்றும் வாத்துகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | COVAXIN தடுப்பூசி 200% பாதுகாப்பானது; இதன் வீரியம் 1 வருடம் வரை நீடிக்கும்!

கேரளாவின் ஆலப்புழா கோட்டயத்தில் பரவிய பறவை காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடை துறை இயக்குநர் ஞானசேரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், குமரி, தென்காசி ,தேனி ,திருப்பூர், கோவை ,நீலகிரி உள்ள 26 சோதனை சாவடிகள் கண்காணிப்பு தேவை என்றும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின் -டை -ஆக்சைடு தெளிக்க வேண்டும் என்றும் ஞானசேரன் உத்தரவிட்டுள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News