பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரத்தில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பி.அன்பழகன் இதுகுறித்து தெரிவிக்கையில்.. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகின்றது.
அண்டை மாநிலமான கர்நாடகாவை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதே வைலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நல்ல எண்ணிக்கையிலேயே செல்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் நாள் பொறியியல் கல்லூரிகளை திறக்க அவகாசம் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரகிறது. இந்த தீர்பின் அடிப்படையிலை பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், புதிதாக மருத்துவக் கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர்,.. நீதிமன்ற உத்தரவால் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற காலதாமதம் ஏற்பட்டாலும், பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று குறிப்பிட்டார்.