சர்ச்சையில் மதுரை கோவில் திருவிழா: கலெக்டர் உத்தரவு!

Last Updated : Sep 27, 2017, 02:12 PM IST
சர்ச்சையில் மதுரை கோவில் திருவிழா: கலெக்டர் உத்தரவு! title=

மதுரை அருகே வெள்ளலூரில் நடைபெறும் சிறுமிகள் திருவிழா தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்த குழு விசாரணை நடத்தியுள்ளது. 

இந்த திருவிழாவில் சிறுமிகள் மேலாடை அணிய அனுமதிக்க வேண்டும் என விழா கமிட்டியிடம் விசாரணை குழு வலியுறுத்தியுள்ளது.

வெள்ளலூரை சுற்றிய 60 கிராம மக்கள் நடத்தும் முக்கிய திருவிழா "ஏழைகாத்த அம்மன் கோவில்" திருவிழா. 

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் 10 - 14 வயது சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மேலாடை இல்லாமல் சாமியாக அலங்கரித்து கோவிலில் 15 நாட்கள் தங்க வைப்பர்.

தற்போது பெண் குழந்தைகளை மேலாடை இல்லாமல் தங்க வைப்பதும் ஊர்வலமாக அழைத்து செல்வதும் அவர்களது உரிமைகளை மீறுகிற செயல் என புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மதுரையை சேர்ந்த சோகோ டிரஸ்ட் என்கிற என்ஜிஓ புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளது. 
  
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வாறு செய்வதால் அவர்களது குடும்பத்திற்கு செல்வம் பெருகும் என்றும், சந்ததிகள் பெருகும் என்றும் அந்த மக்கள் நம்புகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி மீடியாவின் வெளிச்சத்துக்கு வந்தது.

மாவட்டக் கலெக்டரிம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிப்பதாக மாவட்டக் கலெக்டர் கே. வீரராகவன் உறுதி அளித்து, மேலூர் தாசில்தார் தமிழ் செல்வி, சமூக நலத்துறை அதிகாரி சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கவுன்சிலர் ஷோபா, வெள்ளலூர் வருவாய் இன்ஸ்பெக்டர் கார்த்திக் பாபு ஆகியோர் அடங்கிய விசாரணை கமிட்டியை அமைத்தார்.

பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை கமிட்டி கண்டறிந்து இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முக்கிய திருவிழா தொடங்கிவிட்ட நிலையில் அதிக அளவில் தலையிட முடியாது. தொடந்து இந்த நடைமுறைக்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Trending News