தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். வீதி வீதியாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைக்கப்படும்.
இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ". கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க தேவையான கட்டுப்பாடுகள் 30.9. 2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது, நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டு காட்டி இருக்கிறது.
கேரளா மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான் அங்கே கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முழுமையாக சரியாகவில்லை. இப்படி உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு சமய விழாக்களை கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சேர்த்து விழாவிற்கும் பொருந்தும். விநாயகர் சதுர்த்தியன்று தனிநபர் கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
மண்பாண்ட தொழில் செய்யும் 12,000 தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாததால் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படுகிறது; விநாயகர் சிலை செய்யும் 3,000 தொழிலாளிகளுக்கு கூடுதலாக ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது" எனக் கூறினார்.
ALSO READ தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR