மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் அர்ஜுன்ச ம்பத் மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்.
மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப்போல் நடந்துகொள்ளுகிறார் . நாங்கள் அவர் மீது பாய்ந்துவிடுவோம் என்று அறநிலை துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்திவருகிறார் இதுஒரு அபாயகரமான போக்கு.
இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார். அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பார்; அவர் ஒரு பிஜேபி ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது.
மேலும் படிக்க | ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த இளைஞரின் பையில் ரூ.2 கோடி - எங்கு பிடிபட்டது?
இந்து மத சமய நம்பிக்கைகள் சீர் குறைவதும் கோயில்கள் அறநிலையத் துறையில் பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக இருந்துவருகிறது. இது தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய கருத்து இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார்
இந்த கருத்து நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து கிடையாது. இதனை விஜய் ரசிகர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். பெற்ற தாய், தகப்பனைவிட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது. விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்
அறநிலையத் துறை அமைச்சரே பாய்வோம் என்று சொல்லியுள்ளார். ஆதலால் மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
சு. வெங்கடேசன் துவங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் பல்வேறு அருவருக்கத்தக்க கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இது கண்டனத்துக்குரியது. வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவதுபோல் பேசி வருகிறார் அவருக்கும் எனது வன்மையான கருத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் படிக்க | திருமண வீட்டில் மது விருந்து ; குடித்துவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய நண்பர்கள் பலி
மதுரை ஆதீனம் ஆர்எஸ்எஸ்க்கு சாதகமாக இருக்கிறார் என்பது அவர்கள் சொல்லகூடிய குற்றச்சாட்டு முழுவதும் பொய்யான ஒன்று. ஆதீனம் எந்த விதத்திலும் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை சொல்லவில்லை.
கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று ஆதீனம் சொல்லி வருகிறார். இது எப்போதுமே சொல்லப்படக்கூடியதுதான்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR