சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டம் முடிவடையும் நிலையில் போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்:
ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு மற்றும் சட்ட வல்லுனர்களின் நடவடிக்கை குறித்து ஜல்லிக்கட்டு போராட்ட பிரதிநிதிகளிடம் விளக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கான, சட்ட வரைவு டெல்லியிலேயே தயாரிக்கப்பட்டு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
போராட்டத்தில் புகுந்த சமூகவிரோதிகள் போராட்டத்தை திசை திருப்பினார்கள். போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்கள் உள்ளது.
ஹிப் ஹாப் ஆதி, சிவசேனாபதி, ராஜசேகர், அம்பலத்தான் ஆகியோர் 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள்.
ஜல்லிகட்டு போராட்டத்தில் காவிரி விவகாரம், முல்லை பெரியாறு விவகாரங்கள் எழுப்பபட்டன. வன்முறையில் போலீசார் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.