விரைவில் சேலம், ஓசூர், நெய்வேலிக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை!!

Last Updated : Jun 9, 2017, 02:41 PM IST
விரைவில் சேலம், ஓசூர், நெய்வேலிக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை!! title=

உடான் திட்டத்தின் கீழ் சேலம், ஓசூர், நெய்வேலிக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்க உள்ளது.

இந்தியாவில் சிறு நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காக உடான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த உதான் திட்டத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கி வைத்தார்.

2,500 ரூபாய்க்குள்ளான பயணக்கட்டணம் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட உதான் விமான சேவை திட்டத்திற்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த உதான் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சேலம், ஓசூர், நெய்வேலியில் விமான சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

புதிய விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை தமிழக அரசு கொடுத்த ஒதுக்கிய பிறகு, அதற்கான பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News