PM Modi First File Sign: நடைபெற்ற முடிந்த 18ஆவது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 293 தொகுதிகளை வென்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி பிரதமராக நேற்று பதவியேற்றார்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பிரதமர் மோடி உள்பட மொத்தம் 72 பேர் கொண்ட அமைச்சரவையும் நேற்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்டனர். இதன்மூலம், ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவியேற்பவர் நரேந்திர மோடி ஆவார்.
முதல் கையெழுத்து...
பிரதமர் மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி காலத்தில், அவரின் வாக்குறுதிகளின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. புல்லட் ரயில், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நீண்டகால செயல்திட்டங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்ட பின், தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளின் நலத்திட்டம் சார்ந்த ஒரு கோப்பிற்கு கையெழுத்திட்டுள்ளார்.
On first day in office as 3rd time PM, Modi signs file on Kisan Welfare
Read @ANI Story | https://t.co/A2aNhy8aK2#PMModi #KisanWelfare #NDA pic.twitter.com/4LjDHsNKfj
— ANI Digital (@ani_digital) June 10, 2024
பிரதமர் மோடியின் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து விவசாயிகளுக்கு PM Kisan Nidhi என்ற ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிப்பதற்கான ஆணையை பிரதமர் மோடி இன்று கையெழுத்திட்டார். தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் கையெழுத்தாக இந்த கோப்புக்கு பிரதமர் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், இதில் 9.3 கோடி விவசாயிகள் பலனடைவார்கள். மொத்தம் இதன் மூலம், ரூ. 20 ஆயரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அதிருப்தியில் விவசாயிகள்
இந்த கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,"நமது அரசு விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கக் கூடியது. அதனால், அதற்கேற்றது போல், முதல் கோப்பாக விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளோம். விவசாயிகளுக்காகவும், விவசாயம் சார்ந்தும் இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த வருங்காலத்தில் இன்னும் பணியாற்ற வேண்டியுள்ளது" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான விவாசயிகள் போராட்டம் செய்தனர். அதேபோல், பாஜக அரசு வாக்குறுதி அளித்த குறைந்தபட்ச ஆதார விலையை சரியாக அமல்படுத்தாது குறித்து பல விவசாய சங்கங்கள் இன்னும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
பஞ்சாபில் இந்த முறை பாஜக பெருவாரியான தொகுதிகளை இந்த மக்களவை தேர்தலில் இழந்திருக்கிறது. ஹரியானாவில் எந்த பிரச்னை இல்லாவிட்டாலும் பஞ்சாபில் விவசாயிகளின் அதிருப்தியே பாஜகவின் தோல்விக்கு முக்கியமாக காரணமாக பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளால் கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், அதனை நிவர்த்தி செய்ய பாஜக இம்முறை பல திட்டங்களை கொண்டுவரலாம்.
மேலும் படிக்க | மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ