கிரிக்கெட் விளையாட்டில் உட்சபட்ச மோதலாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டி இன்று அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இதனையொட்டி கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனீஷ் கனேரியா, விராட் கோலி உடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒப்பிடுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் பாபர் அசாம் கிடையாது என கடுமையாக பேசியிருக்கிறார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இருவரில் யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது கனேரியா இப்படியான கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க | இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?
தொடர்ந்து பேசிய கனேரியா 'பாபர் அசாம் சதம் அடித்தவுடன், விராட் கோலியுடன் ஒப்பிடுவது அடுத்த நாளே தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை அந்த சதம் எல்லாம் விராட்டின் ஷூக்களுக்கு கூட சமமானவை அல்ல. அண்மையில் கத்துக்குட்டி அணியான அமெரிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கூட பாபர் அசாம் சிறப்பாக ஆடவில்லை. இந்தப் போட்டியில் பாபர் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதுவும் ஒருதலைபட்சமான வெற்றியை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் மிகவும் கேவலமாக அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருக்கிறது. உலக கோப்பைக்கு செல்லும்போதெல்லாம் பந்துவீச்சில் மிகச்சிறந்த அணியாகவே பாகிஸ்தான் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படியான அபாரமான பந்துவீச்சால் மட்டுமே பாகிஸ்தான் அணி தோல்வியையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது." என பேசினார்.
பாகிஸ்தான் அணியில் இருந்து விலகிய பிறகு அந்த அணியில் தன்னுடன் விளையாடிய ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் மீது டேனிஷ் கனேரியா பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தன்னை மதம் மாறும்மாறு அவருடன் விளையாடிய அப்ரிடி உள்ளிட்டோர் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்திருக்கும் கனேரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் விமர்சித்து வருகிறார்.,
நவுசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும். பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினால் அந்த அணிக்கான அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகும். இதற்கிடையே இப்போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இப் போட்டியின் வெற்றி வாய்ப்பை பொறுத்தவரை, இரு அணிகளின் பிளேயிங் லெவனை ஒப்பிடும்போது இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்து கணிப்புகளும், முன்னாள் வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ