பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்ற நிலையில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பாஜக தேசிய தலைவராக இருந்த ஜே.பி. நட்டா கேபினெட் அமைச்சரானார். அதனால் அவர் பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார். இவர்களைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருக்கும் ஜிதன் ராம் மஞ்சி, ஹெச்.டி. குமாரசாமி ஆகியோரும் கேபினெட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், பதவியேற்பின்போது அமித் ஷாவுக்கு முன்பே ராஜ்நாத் சிங் கேபினெட் அமைச்சராக பதவியேற்றார். இதில் என்ன விஷயம் இருக்கிறது? என பலரும் நினைக்கலாம். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது.
மேலும் படிக்க | PM Narendra Modi: பதவியேற்றார் பிரதமர் மோடி... கேபினட்டில் மொத்தம் 72 அமைச்சர்கள்!
பாஜகவில் உட்கட்சி பூசல்
பாஜகவில் தேசியவில் உட்கட்சி பூசல் எழத் தொடங்கியுள்ளது. 2014, 2019 ஆம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்காததற்கு பிரதமர் மோடி - அமித் ஷா ஆகியோரின் தவறான நிர்வாகமே காரணம் என பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களே குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். இதில், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு எதிராக இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக் ராஜ்நாத் சிங் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு நன்றி செல்லாத ராஜ்நாத் சிங்ர, ஜே.பி நட்டா வழிகாட்டுதலின்பேரில் பாஜக இந்த வெற்றியை பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
முக்கியத்துவம் பெறும் ராஜ்நாத் சிங்
பாஜகவில் இருக்கும் பலரின் குரலாக ராஜ்நாத் சிங் ஒலித்த நிலையில், ஆர்எஸ்எஸ் அவருக்கு முக்கியத்தும் கொடுக்க தொடங்கியிருக்கிறது. அமித் ஷாவுக்கு பதிலாக ராஜ்நாத் சிங் பாஜகவில் பிரதானப்படுத்தப்பட உள்ளாராம். அதன் எதிரொலியாக தான் கூட்டணி கட்சிகளிடம் நடத்தும் பேச்சுவார்த்தை முதல் உட்கட்சி ஆலோசனை கூட்டம் வரை ராஜ்நாத் சிங்கிற்கு அடுத்த இடத்திலேயே அமித் ஷா உட்கார வைக்கப்படுகிறார். கேபினெட் அமைச்சர் பதவியேற்பின்போது கூட பிரதமர் மோடிக்கு அடுத்ததாக ராஜ்நாத் சிங்கே பதவியேற்றார். அதன்பிறகே அமித் ஷா பதவியேற்றார். இது வரும் காலங்களிலும் தொடரும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ருசியான டின்னர்... என்னென்ன உணவுகள் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ