டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஜூன் 9 ஆம் தேதி (இன்று) நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடன் பயணித்த ஒருவர், பாகிஸ்தான் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கிறார். அவர் இந்திய அணியை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் வகுத்து கொடுக்க இருக்கிறார். இத்தனைக்கும் அவர் இந்திய அணியுடன் பயணித்தவர், அண்மையில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுடனே இருந்தவர் தான் அவர். பாகிஸ்தான் அணியின் முக்கிய நபராக இப்போது அவர் இருப்பதால், இந்திய அணியை வீழ்த்த அனைத்து வியூகங்களையும் நிச்சயம் கொடுப்பார். இதனை கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எப்படி முறியடிக்கப்போகிறது என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் அணியில் இருக்கும் துருப்புச்சீட்டு
இந்திய அணிக்கு எதிராக வியூகங்களை வகுத்து கொடுக்க பாகிஸ்தான் அணியில் முக்கிய துருப்புச்சீட்டு வேறு யாருமல்ல, அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தான். இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றபோது தலைமை பயிற்சியாளராக இருந்தவர். ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அவரின் பயிற்சியின் கீழ் தான் பாகிஸ்தான் கிரிக்கெட்அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இப்போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவினால் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படும்.
மேலும் படிக்க | இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?
கேப்டன் ரோகித் சர்மா என்ன செய்ய போகிறார்?
அதனால், இந்திய கிரிக்கெட் அணியின் அத்தனை ரகசியங்களையும் தெரிந்த கேரி கிரிஸ்டன் பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டுவர அத்தனை வியூகங்களையும் களமிறக்க தயாராக இருக்கிறார். இந்திய அணி பிளேயர்களைப் பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கு தெரிந்தாலும், இந்திய அணிக்கு நெருக்கடியான சூழல்களை எப்படி உருவாக்குவது, போட்டியின் நடுவில் துருப்புச்சீட்டாக யாரை பயன்படுத்தலாம், இந்திய அணியில் யாரை டார்கெட் செய்யலாம் என்பது குறித்த தெளிவான ப்ளூ பிரின்டை கிரிஸ்டன் போட்டிருப்பார். பாகிஸ்தான் வீரர்களிடமும் இது குறித்து தெரிவித்திருப்பார். இதனால், அந்த அணியின் இந்த வியூகங்களை முறியடிக்க கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகவே இருக்க வேண்டும்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
அதேநேரத்தில் இந்திய அணி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கான அனைத்து வியூகங்களையும் தயாரித்திருப்பார்கள். பிளேயிங் லெவனை பார்க்கும்போது இந்திய அணி பலமாக இருந்தாலும், பாகிஸ்தான் அணி எந்நேரமும் தோல்வியில் இருந்து மீண்டு வரக்கூடிய அணி என்பதால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனை மனதில் கொண்டு சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தினால் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏழாவது வெற்றியை ருசிக்கலாம். இதுவரை இரண்டு ஆணிகளும் அடிய 7 போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
மேலும் படிக்க | சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ