அடுத்தடுத்து வழக்கு.. தொடரும் சிறைவாசம்.. ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை காவல்

Jayakumar Case Update: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்றாவதாக 6 பிரிவின் கீழ் பதியப்பட்ட 5 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு. 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 28, 2022, 02:57 PM IST
அடுத்தடுத்து வழக்கு.. தொடரும் சிறைவாசம்.. ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை காவல் title=

சென்னை: திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

கடந்த 25 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | எதிர்கட்சியை அழித்து விட திமுக அரசு கங்கணம் கட்டியுள்ளது -ஓபிஎஸ் விமர்சனம்

அதேநாளில் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் மத்திய குற்ற குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மகள் மற்றும் மருமகன் ஆகிய மூன்று பேர் மீது சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

120(பி)- கூட்டுசதி, 447-அத்துமீறி நுழைதல், 326- பயங்கர ஆயுதங்களை கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், 397- பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல்,  506(2)-கொலை மிரட்டல், 109- குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25-ம்தேதி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் வைஸ்னவவி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது! காவல்நிலையத்தில் குவிந்த தொண்டர்கள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் வாதம்:

இது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.திமுக அரசு தன்மீது வேண்டுமென்று பழிவாங்க வேண்டுமென்று போடப்பட்ட வழக்கு அண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை.இந்த விவகாரத்தில் என்னை எப்படி சேர்க்க முடியும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது சிவில் வழக்கு இதில் எப்படி நில அபகரிப்பு வரும்.

இந்த வழக்கு முழுவதும் அண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப்பிரச்சினை இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்.

முன்னாள் அமைச்சராக ,முன்னாள் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் மீது  397 கொள்ளை பிரிவு பதிவு செய்யப்பட்டு இருப்பது மிக அநாகரிகமான செயல். 1991-ம் ஆண்டு முதல் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன் என் மீது ஒரு வழக்கு கூட கிடையாது என ஜெயக்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி.. மேலும் ஒரு வழக்கு பதிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News