பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ADMK வேட்பாளர் மாற்றம்

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகனுக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிப்பு!!

Last Updated : Mar 22, 2019, 10:42 AM IST
பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ADMK வேட்பாளர் மாற்றம் title=

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகனுக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

அதில் அதிமுக 20 இடங்களில் களம் காண்கிறது. அந்த தொகுதிகள திருவள்ளூர்(தனி), சென்னை தெற்கு, காஞ்சிபுரம்(தனி), திருவண்ணாமலை, ஆரணி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி(தனி), பொள்ளாச்சி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம்(தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம்(தனி), மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் ஆகும். 

இந்தநிலையில், கடந்த 17 ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியாலை வெளியிட்டது. இதை தொடர்ந்து, நிலையில் பெரியகுளம் தனித் தொகுதிக்கென அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை அதிமுக மாற்றி உள்ளது. முன்னதாக அந்த தொகுதியில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மயில் வேல் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் அல்லிநகர ஜெயலலிதா பேரவையில் துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முனேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி, 18.04.2019 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைதேர்தலில், தேனி மாவட்டம், (199) பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அனைத்திந்திய, அனைத்திந்திய அண்ணா திராவிட முனேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளராக, திரு.M.மயில்வேல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.  

 

Trending News