Rolls Royce கார் விவகாரத்தில் தன் மீதான விமர்சனத்தை நீக்கக் கோரும் நடிகர் விஜய்

பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2021, 07:31 AM IST
  • ரோல்ஸ்ராய் கார் விவகாரத்தில் தன் மீதான விமர்சனத்தை நீக்க நடிகர் விஜய் கோரிக்கை
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல் முறையீடு செய்தார்
  • திங்களன்று மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது
Rolls Royce கார் விவகாரத்தில் தன் மீதான விமர்சனத்தை நீக்கக் கோரும் நடிகர் விஜய் title=

சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

9 ஆண்டுகளுக்குப்பிறகு மனுவின் மீதான தீர்ப்பு வெளியானது. தீர்ப்பை சொன்ன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கதாநாயகர்களாக நடிப்பவர்கள், ரியல் ஹீரோக்களாக இருக்கவேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் வரி விலக்கு நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டார். 

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. காரை வெளிநாட்டில் இருந்து வாங்கும்போது, அதற்கு வரி கட்ட வேண்டும் என்று தெரியாதா என்று தனது கருத்தை கடுமையாக பதிவு செய்து இருந்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். 

Also Read | நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மெட்ராஸ் நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. சமூக ஊடகங்களில் இந்த விஷயம் வைரலானது. விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வரிவிலக்கு எப்படி கொடுக்கப்பட்டது? என்று விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.  

தீர்ப்பு வெளியாகி சில தினங்கள் ஆன நிலையில், தனது மனு மீதான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நேற்று (ஜூலை 17, 2021) சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நடிகர் விஜய். தனக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தன் மீதான விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று விஜய் தனது மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதியின் கருத்துக்கு எதிராக நீதிமன்ற அமர்வு தீர்ப்பு தரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read | #வரிகட்டுங்க_விஜய்: நடிகர் விஜய்யை வரி கட்ட சொல்லி ட்விட்டரில் ட்ரெண்டிங்

சரி விஜய் கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? ஏன் அது தொடர்பான தகவல்கள் ஒரு தரப்பாக பேசப்படுகிறது என்று அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

பிஎம்டபிள்யூ ஷோ ரூமில் இருந்து கார் வாங்கினார். காரில் விலையிலேயே இறக்குமதி வரியும் அடங்கும். அதாவது ஷோரூமே இறக்குமதி வரியை கட்டிவிட்டது. இந்த காரை சாலையில் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு நுழைவு வரி கட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ரிஜிஸ்டிரேஷன் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் கார் பதிவு செய்ய சென்ற போது, நுழைவு வரி கட்டின பிறகு தான் பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. 

காரை தமிழ்நாடு கொண்டு வர இறக்குமதி வரி கட்டி இருக்கும் நிலையில் நுழைவு வரி எதற்கு என்ற கேள்வியை முன்வைத்து தான் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்.

நுழைவு வரி உட்பட அனைத்து வரிகளையும் கட்டி காரை பதிவு செய்து அதை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டார். இருந்தாலும், நுழைவு வரி விலக்கு விதிப்பதற்கு தடை வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றார் என்று கூறப்படுகிறது.

Also Read | விஜய் படத்தை காட்டி சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை; வைரல் போஸ்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News