தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்; கமல்ஹாசனின் பேச்சு குறித்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என மதுரை ஐகோர்ட் கிளை கூறி உள்ளது. அதனால் நான் கருத்து கூற இயலாது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் நிலவும் குடி நீர் தட்டுப்பட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பே இது குறித்து ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு" என அவர் தெரிவிவத்தார்.