#Sterlite ஆலையில் அமிலக் கசிவு சரி செய்யபட்டது -சந்திப் நந்தூரி!!

ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு சரி செய்யப்பட்டுவிட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்! 

Last Updated : Jun 19, 2018, 06:53 PM IST
#Sterlite ஆலையில் அமிலக் கசிவு சரி செய்யபட்டது -சந்திப் நந்தூரி!! title=

ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு சரி செய்யப்பட்டுவிட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் கடந்த மே 28 தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஸ்டெர்லைட்  ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே ஸ்டெர்லைட் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சரி செய்வதற்கான பணிகளை தொடங்கினார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்...! 

ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட கந்தக அமில குடோனில் சுமார் 1,000 லிட்டர் கந்தக அமிலம் இருப்பு உள்ளது. அவை பாதுகாப்பாக டேங்கர் லாரிகளில் அப்புறபடுத்தும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லாரிகளில் கந்தக அமிலம், தேவையின் அடிப்படையில் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

கந்தக அமிலம் மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஆலைகளுக்குத் தேவையின் அடிப்படையில் டேங்கர் லாரிகளில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். மேலும், 11 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. இன்னும் 2 நாள்களில் இவை முழுமையாக அகற்றப்படும். இந்த அமிலக் கசிவு சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே, பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 

இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு, ஆலையில் இருப்பு உள்ள மற்ற அமிலங்களின் இருப்புக் குடோன்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார். 

மேலும், கந்தக அமிலம் வெளியேற்றப்படும் பணிகளை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Trending News