7 பேர் விடுதலை பற்றிய கேள்வியை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை: தமிழிசை

7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை; மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்......

Last Updated : Nov 13, 2018, 09:54 AM IST
7 பேர் விடுதலை பற்றிய கேள்வியை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை: தமிழிசை  title=

7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை; மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்......

சென்னையில் நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதுஅவர், "சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம்" என்றார். "பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள்; அப்போது கண்டிப்பாக அப்படித்தானே இருக்க முடியும்" என்றார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு, "பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியதில் தவறு இருந்தது. அது விரிவாக பேச வேண்டிய விஷயம்" என்றார். 

இதனையடுத்து, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 'எந்த 7 பேர்?' என்று மறு கேள்வி கேட்ட ரஜினிகாந்தை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை. செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்காததால் இன்னொரு முறை கேட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

 

Trending News