சென்னை காவல்துறைக்கு ஜாக்பாட்: பிறந்த நாள் விழாவில் 67 பேர் கைது

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 67 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Last Updated : Feb 8, 2018, 08:07 PM IST
சென்னை காவல்துறைக்கு ஜாக்பாட்: பிறந்த நாள் விழாவில் 67 பேர் கைது title=

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ரவுடி பினுக்கு நேற்று பிறந்த நாள். தனது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சக ரவுடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் ரவுடி பினு. இதனை அடுத்து ரவுடிகள் அனைவரும் பிறந்த நாள் விழாவில் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து பெரிய வீச்சரிவாளைக் கொண்டு ரவுடி பினு கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து ரவுடி கும்பலை பிடிக்க சென்னை மேற்கு மண்டல இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார் மேற்பார்வையில் அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஷ்ராஜ், உதவி கமி‌ஷனர்கள் கண்ணன், ஆல்பிரட் வில்சன், நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், சங்கர் நாராயணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து ரவுடிகள் திரண்டிருந்த ஏரியாவை சுற்றி போலீசார் வளைத்தனர். தங்களை போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த ரவுடிகள் சில பேர் தப்பிச் சென்றுவிட்டனர். ரவுடி பினு உட்பட சில முக்கிய ரவுடிகள் எஸ்கேப் ஆனார்கள். சுமார் 67 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். 60 மோட்டார் சைக்கிள்கள், 6 கார்கள் மற்றும் அரிவாள், கத்திகள் போன்ற ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திரைப்படத்தில் காட்டப்படும் காட்சியை போல நடைபெற்ற ரவுடிகளின் பிறந்த நாள் விழா போலீஸாரை அதிர வைத்திருக்கிறது.

Trending News