வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ஏரிகள், தரைப்பாலங்கள் உடைந்து பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தீவுப்போல் காட்சியளிக்கின்றன. இதனால் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணம், பொருட்கள், உடமைகள் உள்ளிட்ட அனைத்தையும் வெள்ளத்தில் கொடுத்து விட்டு மக்கள் நிற்கதியாக நிற்கின்றனர்.
ALSO READ கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை
பலலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகியுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை சரியாக தூர்வாரப்படாததாலும், போதிய வடிகால் வசதி இல்லாததாலும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் அதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வரும் மத்திய குழு தமிழகத்திற்கு வேண்டிய நிதியை நிச்சயம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/vq9WwoBPAb— Vijayakant (@iVijayakant) November 20, 2021
இனியாவது தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி மழை வெள்ளத்தின் போது பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளை வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வரும் மத்தியகுழு தமிழகத்துக்கு வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும்.
ALSO READ காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR