கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துக்களை இயக்க திட்டமிட்டுள்ளது!
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது. நேற்று துவங்கி வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி., மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பேருந்துக்களும், கோவளத்திற்கு 3 பேருந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21 பேருந்து, மாம்மல்லபுரத்திற்கு 7 பேருந்துக்களும் விடப்பட்டுள்ளது.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8 பேருந்து, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு 8 பேருந்து, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பேருந்து வீதம் விடுமுறை நாட்களில் விடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துக்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.