தமிழகத்தில் முறைகேடாக செயல்பட்ட 126 மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டன.
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி 126 மருத்துவமனைகளில் இயங்கி வந்த ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
மத்திய சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வின்போது ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு மருந்துகள் இருந்த காரணத்தால் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதவிர, தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி 126 மருத்துவமனைகளில் இயங்கி வந்த ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1770 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் போலிகளில் மருத்துவர்கள் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம்.
ஸ்கேன் மையங்களின் உரிமையாளர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து கூறுவது தவறு. வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சட்டம் இயற்றப்பட உள்ளது.
இவ்வாறு கூறினார்.