தடைக்கு விதிக்கப்பட்ட ஸ்மித், வார்னர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்ப்பு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவிருக்கும் ICC உலகக் கோப்பையில் பங்கேற்க்க உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 15, 2019, 01:28 PM IST
தடைக்கு விதிக்கப்பட்ட ஸ்மித், வார்னர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்ப்பு title=

மெல்போர்ன்: ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவிருக்கும் ICC உலகக் கோப்பையில் பங்கேற்க்க உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு சண்ட்பேப்பர் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு(2019) வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14, 2019 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்கின்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்துள்ளது.

தற்போது உலக கோப்பை தொடருக்கான அணிகளை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகிறது. தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் இடையே நிலவியது.

இந்தநிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர்கள் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), ஜேசன் பெஹண்டிராப், அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), நாதன் கூல்டர் நைல், பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஜய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

Trending News