WI vs BAN: பங்களாதேஷ்க்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 321 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்தில் நடைப்பெற்றது வரும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2019, 06:52 PM IST
WI vs BAN: பங்களாதேஷ்க்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 321 ரன்கள் குவிப்பு title=

18:52 17-06-2019
இன்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆரம்ப முதலே நிதானமாகவும், அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (wk) மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். அந்த அணியில் அதிகபட்சமாக, அணியின் விக்கெட்-கீப்பர் ஷாய் ஹோப் 96(121) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் முகமது சைபுதீன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷகிப் அல் ஹசன் இரண்டு விக்கெட் கைபற்றினார்.

 

 


16:38 17-06-2019

ஒரு விக்கெட்டை இழந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓவர் முடிவில் 90 ரன்களை எடுத்துள்ளது.


டவுன்டன்: இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணி மோத உள்ளது. இந்த போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

2019 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, இரண்டு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் உள்ளது.

அதேபோல பங்களாதேஷ் அணியும் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது. இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று 8 வது இடத்தில் உள்ளது. 

ஏறக்குறைய இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இரண்டு அணிகளின் வெற்றி, தோல்வி மற்றும் புள்ளிகள் சமநிலையில் தான் உள்ளது. ஆனால் புள்ளி பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னணியில் உள்ளது. காரணம், அந்த அணியின் ரன்-ரேட் ஆகும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் 5வது இடத்திற்கு முன்னேறும். இது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொள்வதற்கு முக்கியமானதாகும். எனவே இரண்டு அணிகளுக்கு இந்த போட்டி மிக முக்கியமானதாகும். இதனால் இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சிப்பார்கள். 

மேற்கிந்திய தீவுகள்: ஷாய் ஹோப் (wk), ஜேசன் ஹோல்டர் (இ), கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஆண்ட்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வைட், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், ஷானன் கேப்ரியல், ஆஷ்லே நர்ஸ், டேரன் பிராவோ, ஃபேபியன் ஆலன், கெமர் ரோச்

பங்களாதேஷ்: முஷ்பிகுர் ரஹீம் (வார), மஷ்ரஃப் மோர்டாசா (சி), தமீம் இக்பால், சமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முகமது மிதுன், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், சபீத் ரஹ்மான், சபீத் ரஹ்மான், ரூபன்

Trending News