விம்பிள்டன் 2018: இலண்டனில் தொடங்கியது டென்னிஸ் தொடர்.....!!

இன்று முதல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடக்கம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2018, 05:38 PM IST
விம்பிள்டன் 2018: இலண்டனில் தொடங்கியது டென்னிஸ் தொடர்.....!! title=

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடங்கி வரும் 15 ஆம் தேதி வரை இலண்டன் நகரத்தில் நடக்கிறது.

நான்கு வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு நடைபெறுகிறது. இதில் முதலில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், செர்பியாவின் டுசான் லஜோவிக்கும் மோதுகிறார்கள்.

மேலும் இந்த தொடரில் முன்னணி வீரர்களான பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், குரோஷியாவை சேர்ந்த மரின் சிலிச், ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவை சேர்ந்த  ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த டொமினிக் திம், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவை சேர்ந்த ஜான் இஸ்னர் மற்றும் இடைநிலை வீரர்கள் பங்கேற்கின்றனர். 

அதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முகுருஜா, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் செரீனா வில்லியம், ரஷியாவின் மரிய ஷரபோவா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ்,  ஆஸ்திரேலியாவின் வோஸ்னியாக்கி, உக்ரைன் நாட்டை சேர்ந்த எலினா ஸ்விடோலினா, செக்குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவா, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் பல வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.307 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ. 20¼ கோடியுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 

Trending News