கிரீசுக்கு வெளியே நிற்கக்கூடாது: நடுவரின் முடிவால் சர்ச்சை!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்ய கூடாது என நடுவர்கள் தடுத்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2021, 02:35 PM IST
கிரீசுக்கு வெளியே நிற்கக்கூடாது: நடுவரின் முடிவால் சர்ச்சை!  title=

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இப்போட்டியில் ரிஷப் பண்ட் கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்ய கூடாது என்று நடுவர்கள் ஆட்சேபனை தெரிவித்தது மிகவும் குழப்பமாக உள்ளது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்தால் பேட்ஸ்மேனின் கால்தடங்கள் பட்டு ஆடுகளம் (pitch) சேதமடையும் என்று நடுவர்கள் கூறியுள்ளனர்.  ஆனால் இதற்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  பேட்ஸ்மேன் ஆடுகளத்தின்  எங்கிருந்து வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம், அது அவரது முடிவு.  ஆனால் நடுவர்கள் ரிஷப் பண்ட்டை கிரீசுக்கு(crease) வெளியே நிற்க வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாக உள்ளது.  பேட்ஸ்மேன்கள் இறங்கிவந்து அடிக்கும்போது ஆடுகளம் சேதமடையாதா? இது புதிதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடுவர்களின் இந்த கருத்து ஒரு அபத்தமான முடிவு என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிஷப் பண்ட், நான் கிரீசுக்கு (crease) வெளியே நின்று பேட்டிங் செய்தபோது என்னுடைய கால் ஆடுகளத்தில் முக்கியமான பகுதியில் இருப்பதாக நடுவர்கள் கூறினர்.  பின்பு என்னை கிரீஸ்க்கு(crease) உள்ளே நின்று பேட்டிங் செய்ய என்று சொன்னார்கள்.  ஒரு பேட்ஸ்மேனாக நான் இதற்கு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.  ஏனெனில் எந்த பேட்ஸ்மேன் வெளியேறினாலும் நடுவர்கள் அப்படித்தான் கூறப் போகிறார்கள், எனவே நான் அதை கண்டுகொள்ளவில்லை.  அதன்பின் நான்  கிரீஸ்க்கு(crease) உள்ளே இருந்து ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQY

Trending News