சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை நேற்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் அறிவித்தனர். பலரும் எதிர்பார்த்த வீரர்கள் இடம் பெற்று இருந்தாலும் துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டிருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அணியில் சீனியர் வீரர்கள் பலர் இருந்த போதிலும் எதற்காக சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. கடைசியாக சுப்மான் கில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க | Virat Kohli Injury: விராட் கோலி காயம்! இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் தான்!
ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ராவின் உடற் தகுதியை கருத்தில் கொண்டு தான் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அடுத்த இந்திய அணியின் கேப்டன் இவர்தானா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது. சமீபத்திய தொடர்களில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் ரோகித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் ரோகித் ஓய்வை அறிவிக்கலாம். அதன் பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேவைப்படுகிறது. தற்போது டி20 போட்டிகளுக்கு சூர்யாகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வருகிறார். டெஸ்ட் மட்டும் ஒரு நாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கிறார்.
Rohit Sharma & Ajit Agarkar want Shubman Gill as the Vice Captain
Gautam Gambhir wants Hardik Pandya as Vice Captain #ChampionsTrophy2025 pic.twitter.com/rzDWCERDg8
— RAJA DK (@rajaduraikannan) January 19, 2025
சீனியர் வீரர்கள்
கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன்சி அனுபவிக்க வீரர்கள் அணியில் இருந்த போதிலும் சுப்மான் கில்க்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்துள்ளது. பும்ரா ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார், இருப்பினும் அவருக்கு ஏற்படும் காயங்கள் முழு நேர கேப்டன் பதிவை கொடுக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. டெஸ்டில் 3வது இடத்தில் களமிறங்கும் கில், ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங் செய்து வருகிறார். 2023-ல் 63.36 சராசரியில், 105.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 1584 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்களும் அடங்கும்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா.
மேலும் படிக்க | பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடுகள்.. ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ